நிதி பிரச்சினை : அரச தொலைக்காட்சிகளையும் விற்பனை செய்யும் அரசாங்கம்!
நாட்டின் நிதிப் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு அரச தொலைக்காட்சிகளை விற்பனை செய்யும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
அம்பாறை பிரதேசத்தில் நேற்று (14.08) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சஜித் பிரேமதாச, "ஐ சேனல் விற்பனை செய்யப்படவுள்ளது. குத்தகைக்கு விடப்பட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நாட்டின் நிதிப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் தற்போது ஐ சேனல் கைமாறி விட்டது. ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு அனுப்பப்பட்டது. இப்போது நாங்கள் கவரேஜ் ஒப்புதலைப் பெறப் போகிறோம். அனைத்தும் வீணாகப் போகிறது.
இந்த ஏலங்கள் அனைத்தும் எங்கள் அரசாங்கத்தின் கீழ் திரும்பப் பெறப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.