இரு சுவர்களுக்கிடையில் சிக்கிய மாணவி: தீவிர நடவடிக்கையின் பின் மீட்பு
#SriLanka
#School Student
Mayoorikka
2 years ago
களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த மாணவி தீவிர மீட்பு நடவடிக்கையின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
களுத்துறை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து ஹைட்ரோலிக் எரிவாயு மூலம் 2 சுவர்களுக்குமிடையிலான இடைவெளியை அதிகரித்து மாணவியை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் வகுப்பில் கல்வி கற்கும் இந்த மாணவி விளையாடும் பொழுது, இரண்டு சுவர்களுக்கிடையில் சிக்கியுள்ளார்.
எனினும், இதன்பின்னர் அவருக்கு வெளியே வருவது கடினமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் பாடசாலை ஆசிரியர்கள் மாணவியை வெளியே எடுக்க முயன்றுள்ள போதிலும் அது சாத்தியமாகியிருக்கவில்லை.
இதனையடுத்து, களுத்துறை தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் இந்த மாணவியை மீட்டுள்ளனர்.