இலங்கையில் முதன்முறையாக நிலத்துக்கு அடியில் 124 மீற்றர் தொலைவில் உணவகம்

#SriLanka #Food #Lanka4
Kanimoli
2 years ago
இலங்கையில் முதன்முறையாக நிலத்துக்கு அடியில் 124 மீற்றர் தொலைவில் உணவகம்

இலங்கையில் முதன்முறையாக, நிலத்துக்கு அடியில் 124 மீற்றர் தொலைவில் போகல காரீய சுரங்கத்தில் உணவகமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சுரங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்தார்.

 குறித்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து உணவருந்தக்கூடிய வசதி உள்ளதாகவும் மேலும், இந்த உணவகத்தின் ஊடாக காரீயம் வெட்டும் தொழிலாளர்களுக்கும், சுரங்கத்துக்கு வரும் மக்களுக்கும் உணவு வழங்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜேர்மனி, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு காரீயம் ஏற்றுமதி செய்து நாட்டுக்கு அதிக அளவில் அந்நிய செலாவணியை இந்த காரீய சுரங்கம் ஈட்டித்தருவதாக அதன் நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!