ஆகஸ்ட் 2023 முதல் பத்து நாட்களுக்குள் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை
#SriLanka
#Tourist
#Lanka4
Kanimoli
2 years ago
ஆகஸ்ட் 2023 முதல் பத்து நாட்களுக்குள் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கையின் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலா அமைச்சின் கூற்றுப்படி, குறித்த காலப்பகுதியில் மொத்தம் 51, 594 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.
இந்த காலகட்டத்தில் இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு மொத்தம் 819, 507 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.