மருத மடு ஆலய திருவிழாவிற்கான வெஸ்பர் ஆரதனை இன்று
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி நாளை செவ்வாய்க்கிழமை (15) காலை 6.15 மணிக்கு திருத்தந்தையின் பிரதிநிதி தலைமையில் ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுக்க உள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (14) மாலை வேஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்பட்ட உள்ளது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மடு திருவிழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ள உள்ள நிலையில் விசேட பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.