பொலிஸ்மா அதிபரின் முகநூல் ஹக் செய்யப்பட்டுள்ளது!
#SriLanka
Mayoorikka
2 years ago
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் உத்தியோகபூர்வ முகப்புத்தகப் பக்கம் ஹக் செய்யப்பட்தையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஓன்றைப் பதிவு செய்துள்ளார்.
இனந்தெரியாத நபர் ஒருவர் தன்னுடைய முகப்புத்தகப் பக்கத்தை ஊடுருவியுள்ளதாக தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
முகப்புத்தகத்தை மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.