தற்போதைய வறட்சியான காலநிலையினால் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையாது - மஹிந்த அமரவீர
#SriLanka
#Mahinda Amaraweera
#Lanka4
#famers
Kanimoli
2 years ago
தற்போதைய வறட்சியான காலநிலையினால் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, தோட்டத்தில் உண்ணக்கூடிய ஒன்றை அதன் சுவை பற்றி சிந்திக்காமல் அதனை வளர்ப்பதே பொருத்தமானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது போதுமான அளவு அரிசி இருப்பதால், தேவைப்பட்டால் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.