வெளிநாடு சென்றவர்களுக்கும் இலங்கையில் வீடுகள் அமைக்கும் பணிகள்!

#SriLanka #Home
Mayoorikka
2 years ago
வெளிநாடு சென்றவர்களுக்கும்  இலங்கையில் வீடுகள் அமைக்கும் பணிகள்!

தொழில் வாய்ப்புக்காக வௌிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து ஆரம்பித்துள்ளன. இந்த வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் மூன்று முறைகளின் மூலம் செயற்படுத்தப்படவுள்ளது.

 இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிதியுதவி வழங்குவதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

 இது தொடர்பான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரால் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வீட்டுத் தேவை உடைய வெளிநாட்டுப் பணியாளர்கள் தொடர்பில் ஏற்கனவே கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளதுடன், சுமார் 1,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!