மில்லியன் கணக்கான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை!
#SriLanka
#Central Bank
Mayoorikka
2 years ago
ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.