நைஜீரியாவில் மசூதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயம்
#Death
#world_news
#Tamilnews
#Died
#ImportantNews
#Killed
Mani
2 years ago

நைஜீரியாவின் கடுனா மாகாணத்தில் உள்ள ஜாரியா நகரில் உள்ள மசூதியில் நூற்றுக்கணக்கானோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். திடீரென்று, மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது, இதனால் இடிபாடுகள் தொழுகை செய்து கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி, சிக்கியவர்களைக் காப்பாற்றினர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 23 நபர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தற்போது தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மசூதி, 1830-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பழமையான மசூதி என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கடுனா கவர்னர் உபாசானி கூறும்போது, இந்த விபத்து இதயத்தை உடைக்கிறது. இந்த பேரழிவு குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.



