உருத்திரபுரம் கூழாவடியில் வன்னிமண் அறக்கட்டளையினால் சிரமதானம் முன்னெடுப்பு

#SriLanka #Kilinochchi #Event #Lanka4
Kanimoli
2 years ago
உருத்திரபுரம் கூழாவடியில் வன்னிமண் அறக்கட்டளையினால் சிரமதானம் முன்னெடுப்பு

உருத்திரபுரம் கூழாவடியில் வன்னி மண் அறக்கட்டளையால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (13) சிரமதானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் இருந்து வருகை தந்த சமூக செயற்பாட்டாளர் அபர்ணா செல்வராசா அவர்களின் எண்ணக்கருவில் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.

images/content-image/1691936174.jpg

 'பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை முற்றாக தவிர்ப்போம் 'என்கின்ற தொனிப் பொருளில் உருத்திரபுரம் கூழாவடி, உழவர் ஒன்றிய விளையாட்டு கழக மைதானம் மற்றும் உருத்திரபுரீஸ்வரர் சிவன் ஆலயம் அதை சூழவுள்ள குளக்கட்டு பகுதிகளில் காணப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பட்டதுடன் அதை பிரதேச சபையினரிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

images/content-image/1691936189.jpg

 இந்த சிரமதானத்தில் கனடா நாட்டில் இருந்து வருகை தந்த சமூக செயற்பாட்டாளர் அபர்ணா செல்வராசா, அவரது தந்தை, உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள்,வீரர்கள், வன்னிமண் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் கூழாவடி கடை உரிமையாளர்கள் என பலரும் இந்த பணியில் சிரமதானத்தில் கலந்து சிறப்பித்தனர். இந்த முன்னுதாரணமான செயற்பாட்டை பலரும் வாழ்த்தியதுடன் தொடர்ந்தும் இந்த சிரமமான பணி ஒவ்வொரு மாதமும் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

images/content-image/1691936204.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!