ஹம்பாந்தோட்ட மாவட்ட வைத்தியசாலையில் எழுந்துள்ள சிக்கல்!

#SriLanka #Hambantota #Lanka4
Thamilini
2 years ago
ஹம்பாந்தோட்ட மாவட்ட வைத்தியசாலையில் எழுந்துள்ள சிக்கல்!

ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுரங்க உபேசேகர தெரிவித்தார். 

இதன் காரணமாக பொது சத்திரசிகிச்சைகளை தவிர்த்து ஏனைய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதில் வைத்தியசாலை நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர் கல்விக்காக நாட்டை விட்டு வெளியேறினாரா அல்லது நிரந்தர வதிவிடத்திற்காக சென்றாரா என்பது குறித்தும் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

எவ்வாறாயினும், அவசர சத்திரசிகிச்சைகளுக்காக நோயாளர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்ப வேண்டியுள்ளதாகவும், வழமையான சத்திரசிகிச்சைகள் நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!