மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ் இந்துக்கல்லூரி மாணவன் பலி

#SriLanka #Jaffna #Death #Student #Accident
Prathees
2 years ago
மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ் இந்துக்கல்லூரி மாணவன் பலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி நுணாவில் பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் 19 வயதான பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

 இன்று (13) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் சாவகச்சேரியை சேர்ந்த 19 வயதான சிவபாலன் பிரவீன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

 மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச்சென்ற கனரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

 உயிரிழந்தவரின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!