படகில் அவுஸ்திரேலியா வர வேண்டாம்: யாழ்ப்பாணத்தில் அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவிப்பு
அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரிகள் குழு மற்றும் வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் இலங்கை சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமது கடமைகளில் புதிய தொழிநுட்ப அறிவை வழங்குவதற்கான நடைமுறை பயிற்சி நெறிகளை அவுஸ்திரேலியாவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநரிடம் பிராட் இசாண்டர் தெரிவித்தார்.
காங்கேசன்துறை துறைமுகத்தை போன்று பலாலி விமான நிலையத்தையும் எதிர்காலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் வடமாகாண ஆளுநர் இந்த கலந்துரையாடலில் தெரிவித்தார்.
இலங்கைக்குள் சட்டவிரோத போதைப்பொருள் உட்பட அனைத்து சட்டவிரோத மனித நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவு தேவை எனவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அரசாங்கம் எதிர்காலத்தில் சிறந்த ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கும். கடற்படையினரின் உதவியுடன் வடக்கு கடலிலும் இலங்கை கடற்பரப்பிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு அதிகார சபையின் செயலாளர் பிராட் இசாண்டர் மேலும் தெரிவித்தார்.