எரிபொருள் பௌசரும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் வைத்தியசாலையில்
பத்தனை திம்புல பிரதேசத்தில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் பௌசர் வாகனத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திக் ஓயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் இருந்து கொட்டகலை நோக்கி எரிபொருள் பவுசர் ஒன்றும் நோர்வூட்டில் இருந்து நுவரெலியா நோக்கி கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காரில் பயணித்த நால்வரும், சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்களை கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பத்தனை திம்புல பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொட்டகலை வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர், இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக திக் ஓயா கிளங்கன் மாவட்ட ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.