ரணிலும் சஜித்தும் என் இரு கண்கள்: மாத்தளை மாவட்ட எம்பி

#SriLanka #Sajith Premadasa #Ranil wickremesinghe
Prathees
2 years ago
ரணிலும்  சஜித்தும்  என் இரு கண்கள்: மாத்தளை மாவட்ட எம்பி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் தமது கண்களைப் போன்றவர்கள் என சமகி ஜன பலவேகயே கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

 ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரில் தனக்கு மிகவும் பிடித்த தலைவர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 சஜித் பிரேமதாச அவர்கள் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததன் காரணமாக மக்களின் கனவு இளவரசனாகும் வாய்ப்பை இழந்ததாகவும் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் 2024ல் மக்களின் கனவு இளவரசனாக இருப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

 இணைய சேனலுடன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரோஹினி குமாரி கவிரத்ன இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!