ஹட்டன் - நுவரெலியா வீதியில் விபத்து!
எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசரும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (12.08) இரவு ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் திம்புலபதான சந்தியில் இடம்பெற்றது.
வெலிமடையிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற பவுசரும் நோர்வூட்டில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காரை ஓட்டிச் சென்ற சாரதி அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்த ஐந்து பேரும் நோர்வூட் பிரதேசத்தில் வசிக்கும் 20-30 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் திம்புல பத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்தில் கார் மற்றும் பௌசர் ஆகியன பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.