60 வறிய மாணவர்களுக்கு கல்விக் கொடுப்பனவு மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கி வைப்பு

#SriLanka #Mannar #Event #Lanka4
Kanimoli
2 years ago
60 வறிய மாணவர்களுக்கு கல்விக் கொடுப்பனவு மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கி வைப்பு

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கம் கத்தோலிக்க ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கு கல்விக் கொடுப்பனவு மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை(12) காலை 9.30 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

images/content-image/1691894879.jpg

 மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் அருட்தந்தை தி.நவரெட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் எஸ்.சந்தியோகு கலந்து கொண்டார்.

images/content-image/1691894912.jpg

 இதன் போது மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 60 மாணவ மாணவிகளுக்கு கல்விக் கொடுப்பனவு மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் செயலாளர் எஸ்.ஏ.ராதா பெர்னாண்டோ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/1691894976.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!