மடு அன்னையின் ஆவணி திருவிழா-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை

#SriLanka #Mannar #Lanka4 #Church
Kanimoli
2 years ago
மடு அன்னையின் ஆவணி திருவிழா-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை

மடுமாத ஆலயத்தின் ஆவணி திருவிழா வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தின் பல பாகங்களில் இருந்தும் இன மத பேதமின்றி மடு திருத்தலம் நோக்கிய பக்தர்களின் நடைபயணம் இன்றைய தினம் பாண்டியன்குளம் நட்டாங்கண்டல் பகுதியை வந்தடைந்துள்ளது.

 எதிர்வரும் 15 ஆம் திகித மடு அன்னையின் ஆவணி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் உள்ள மாவட்டங்களில் இருந்து மக்கள் ஒவ்வொரு வருடமும் நடைபயணம் மேற்கொண்டு மடு திருத்தலம் நோக்கி பாதாயாத்திரையாக செல்வது வழமை அதே போல் இம்முறையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடக்கின் பல பாகங்களிலிருந்தும் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்

 முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,இரணைப்பாலை வற்றாப்பளை பகுதிகளில் இருந்து கட்டம் கட்டமாக மக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்ய நடைபயணம் மேற்க்கொண்டு வருகின்றார்கள். இதேவேளை யாழ்ப்பாணம் கரவெட்டி, துன்னாலை சதாசகாய மாதா ஆலயத்திலிருந்து நேற்று முன்தினம் நடைபயணம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் நேற்று காலை நட்டாங்கண்டல் பகுதியை வந்தடைந்துள்ளனர்

 இவ்வருடம் அதிகளவான மக்கள் நேர்த்தி கடன்களை நிறைவுசெய்ய கட்டம் கட்டமாக நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளார்கள். யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பக்த்தர்கள் முல்லைத்தீவு-மன்னார் எல்லை கிராம பாதையான பாண்டியன்குளம் , நட்டாங்கண்டல்,பாலம்பிட்டி சென்று அங்கிருந்து மடுவிற்கு செல்வதாக தெரிவித்துள்ளார்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!