நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முதன்முதலாக வாய்திறந்த கெஹலிய
#SriLanka
#Keheliya Rambukwella
Prathees
2 years ago
எதிர்க்கட்சிகளினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தானும் அரசாங்கமும் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை மேலும் தாமதப்படுத்துவதற்கு எதிர்க்கட்சியின் சில குழுக்களை ஒன்றிணைக்க முடியாமல் போனதே காரணம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.