சீனாவில் கடும் மழை- நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி

சீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், அந்நாட்டின் வடக்குப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.
தொடர் மழையால் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இது வரை, சீனாவில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 78 ஐ எட்டியுள்ளது, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை வடக்கு சீனாவின் ஜியான்ஸ் நகரில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் நிலத்தில் மூழ்கியதால், விழுந்த சேற்றின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நிலச்சரிவில் சிக்கிய வீடுகளின் இடிபாடுகளை அகற்றினர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் 16 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். தொடர் மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



