ஹவாய் தீவில் காட்டுத்தீ உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது
#world_news
#island
#fire
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவில் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டுத் தீ ஏற்பட்டது. நகருக்குள் தீ பரவியதால், வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன. உயிருக்கு பயந்து ஏராளமானோர் கடலில் குதித்து பாதுகாப்பு தேடினர்.
இந்த காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது, பலர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ அணைக்கப்பட்டாலும், புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த காட்டுத்தீயில் சிக்கி தற்போது தீ அணைக்கபட்டதால் பொதுமக்கள் ஊருக்கு திரும்பினார்கள். அவர்கள் வீடுகள் தீயில் எரிந்து எலும்புகூடாக காட்சி அளிப்பதை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார்கள். தீ விபத்தில் வீடுகளுக்குள் இருந்த அனைத்து பொருட்களும் சேதம் அடைந்ததால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.



