சவேந்திர சில்வாவிற்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி!
இலங்கையின் யுத்த குற்றவாளிகளுக்கு பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிப்பு அதிகார சபையின் கீழ் தடை விதிக்கும் வகையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று (11.08) மெய்நிகர் வழியாக நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்போது இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக் குற்றவாளிகளுக்கு தடை விதிக்க பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளரான கீத் குலசேகரம், “இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டிய அவர், தற்போது இலங்கையில் நடைபெறும் ஆட்கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களுக்கும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுதப்படைகளே காரணம் எனவும், ஆகையால் அதற்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சவேந்திர சில்வாவை தடை செய்ய FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும்படியும் அவர்கேட்டுக்கொண்டார்.