நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் - ஒருவர் பலி!

#SriLanka #Death #Lanka4 #GunShoot
Thamilini
2 years ago
நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் - ஒருவர் பலி!

நீர்கொழும்பு கடற்கரைப் பகுதியில் இன்று (12.08) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 

சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிடிபன பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை டங்கல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!