கடற்தொழிலுக்கு சென்றவர் மாயம்: தாய் மற்றும் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை

#SriLanka
Mayoorikka
2 years ago
கடற்தொழிலுக்கு சென்றவர் மாயம்: தாய் மற்றும் மனைவி  கண்ணீர் மல்க கோரிக்கை

கடற்றொழிலுக்கென சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவுமாறும் காணாமல் போனவரின் தாயார் மற்றும் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

 யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கடந்த 04/08/2023 அன்று கடலுக்கென சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை என்றும், அவரை கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை நாகர்கோவில் பகுதியில் மடக்கி பிடித்த ஊரவர்கள் கடத்தல் தொடர்பில் ஒப்புக்கொண்ட நிலையில் அவரை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், தெரிவித்துள்ள தாயார் மேலும் அவருடன் சென்ற ஒருவர் கஞ்சா கடத்தல் தொடர்பில் கைதாகி இருப்பதுவும் தெரிவித்துள்ளார்.

 தனது மகன் வீடு திரும்பாத நிலையில் பருத்தித் துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும்,பொலிசாரும் அவரை தேடி வருவதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள தாயார், அவரை மீட்டுத் தருமாறும், கோரிக்கை விடுத்துள்ளார். 

இதேவேளை இந்தியாவிலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டு காணாமல் போனவர் கஞ்சா கடத்தலிற்காக இந்தியா வந்தவேளை தவறியுள்ளதாகவும் தெரிவித்ததாகவும் அன்றிலிருந்து அவரது தொலைபேசி செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!