விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்துவதற்கு சம்பந்தன் யார்? வெடித்தது போராட்டம்

#SriLanka #R. Sampanthan #Trincomalee #Protest
Mayoorikka
2 years ago
விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்துவதற்கு சம்பந்தன் யார்? வெடித்தது போராட்டம்

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 குறித்த பகுதியில் அமைக்கப்படவிருந்த விகாரையானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலையீட்டுடன் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அத்துடன் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்துவதற்கு சம்பந்தன் யார்? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குமார்களினால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் மூவின மக்களது சகோதரத்துவத்தையும் வீணடிக்கின்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை உடனடியாக பதவி நீக்கம் செய்வோம் எனவும் இதன்போது எச்சரித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!