நாட்டிற்கு 812 பில்லியன் பெறுமதியான பிளாஸ்டிக் கொண்டு வரப்பட்டது!

#SriLanka #Import
Mayoorikka
2 years ago
நாட்டிற்கு 812 பில்லியன் பெறுமதியான பிளாஸ்டிக் கொண்டு வரப்பட்டது!

2018ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 812 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (11ஆம் திகதி) தெரிவித்தார்.

 பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (சஜபா) கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களின் அளவு 02 பில்லியன் கிலோகிராம் என தெரிவித்தார்.

 இலங்கைக்குள் பிளாஸ்டிக் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் இதுவரை 07 வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

 எவ்வாறாயினும், இந்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை படிப்படியாகக் குறைவதாகத் தோன்றுவதாகவும், சட்டங்களை இயற்றுவதற்குப் பதிலாக, மனோபாவத்தில் மாற்றத்தின் ஊடாக பிளாஸ்டிக் பாவனையைக் குறைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!