இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு!

#India #SriLanka #Defense
Mayoorikka
2 years ago
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு!

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலபடுத்த தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே உறுதியளித்துள்ளார்.

 இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் கடந்த 10 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்தார்.

 இந்த சந்திப்பின் போதே பிரதி உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் பல முக்கியமான விடயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, இலங்கை தரப்பில் இருந்து தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், பிரதி உயர்ஸ்தானிகரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!