இராவணன் தமிழ் மன்னனா, சிங்கள மன்னனா? : நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

#SriLanka #Parliament #Lanka4
Thamilini
2 years ago
இராவணன் தமிழ் மன்னனா, சிங்கள மன்னனா? : நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

இராவணன் தமிழ் மன்னனா அல்லது சிங்கள மன்னனா என்பதை ஆய்வு செய்வது பயனற்றது எனவும், அவர் இலங்கையை ஆட்சி செய்த சிறந்த அரசர்களில் ஒருவர் என்பதே உண்மை எனவும், பாராளுமன்ற உறுப்பினர்  ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்துள்ளார். 

இராவணன் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண கொண்டுவந்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  மகாவசம்சத்தில் மறைக்கப்பட்ட இராவணவனின் யுகத்தை வால்மீகி இராமாயணத்தில் வெளிக்கொண்டு வந்ததையிட்டு வால்மீகிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

இராவணன் வரலாற்று கதைகளை வெறும் கற்பனை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல விடயங்கள் உண்மை தன்மையாகவே காணப்படுகிறது. இராவணன் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு சிறந்த மாவட்டமாக மாத்தளையை தெரிவு செய்ய வேண்டும். 

இராவணன் 10 பிரதேசங்களை ஆண்டதாகவும், 10 கலைகளில் சிறந்து விளங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆகையினாலேயே அவர் 10 தலையுடைய  இராவணன் எனப்போற்றப்பட்டார். 

அவர் தமிழ் மன்னரா, சிங்கள மன்னரா என்று வாதிடுவது பயனற்றது. அவர் சிறந்த அரசர்களில் ஒருவர் என்பதே உண்மை” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!