கடலட்டை பண்ணைகளுக்கான எல்லைப்படுத்தல் பணிகள் முன்னெடுப்பு
கடலட்டைகள் வளர்ப்பில் சட்டரீதியான முயற்சிகளை துரிதப்படுத்த கௌரவ அமைச்சர் திட்டம் வலைப்பாடு கடல் பிரதேசத்தில் அட்டை பண்ணைகளை எல்லைப்படுத்தும் பணிகள் இன்று NARÀ நிறுவன அதிகாரிகளால் முன்னெடுக்கப் பட்டன.
தமக்கான அட்டை பண்ணைகளுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்து சட்ட ரீதியான உற்பத்தி நடவடிக்கைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை பெற ஆவன செய்யுமாறு கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அவரது விசேட ஏற்பாட்டின் கீழ் இந்த பண்ணைகளுக்கான எல்லைப் படுத்தும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இவ் எல்லை நிர்ணய பணிகளை தொடர்ந்து நொச்சி முனை, நாச்சிக்குடா கடற் பகுதிகளிலும் இவ் அட்டை பண்ணைகளுக்கான எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வுள்ளதாக பூநகரி பிரதேச செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் வலைப்பாடு அட்டை பண்ணை பயனாளிகளில் 45 பண்ணையாளர்களுக்கான அனுமதிப்பத்திரங் களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை துறைசார் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதில் கரையோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரும் கலந்து கொண்டு தேவையான ஆலோசனை வழிகாட்டலை வழங்கியிருந்தார்.