தென் மாகாணத்திற்கு மின்சாரம் வழங்க தடையாக இருந்த காணி பிரச்சினைக்கு தீர்வு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
தென் மாகாணத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு தடையாக இருந்த காணி பிரச்சினை இன்று (11.08) தீர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்னபுர சிறிபாகம பிரதேசத்தில் உள்ள அந்த காணியின் உரிமையை எவ்வித பணமும் அறவிடாமல் இலவசமாக வழங்குவதற்கு காணி உரிமையாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மத்தியஸ்தத்தின் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆறு நாட்களுக்குள் தென் மாகாணம் பிரதான மின்சார அமைப்புடன் இணைக்கப்படும் எனவும், அதன் பின்னர் தென் மாகாணத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தனியார் காணி காரணமாக பொல்பிட்டியவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை இயங்கும் அதியுயர் மின் கடத்தல் பாதையை எட்டு வருடங்களாக இணைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.