ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் குறித்து கோர்டன் பிரவுன் விமர்சனம்!

#Afghanistan #world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் குறித்து கோர்டன் பிரவுன் விமர்சனம்!

பெண்களை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தானில் தலிபான்களால்  விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் வலியுறுத்தியுள்ளார்.  

இவ்வாறான மனித உரிமை மீறலுக்கு காரணமானவர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

2021ல் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள்,  பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் வகையில் பல முடிவுகளை எடுத்துள்ளனர் எனவும். தற்போது, ​​தலிபான் ஆட்சி ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான கல்வி உரிமையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 மேலும் அவர்கள் வேலை செய்வதையும் பொது இடங்களுக்குச் செல்வதையும் தடை செய்கிறது எனக் குறிப்பிட்டுள்ள கோர்டன் பிரவுன்,  சிலர் இதை பாலின பாகுபாடு என்று விளக்கினாலும், உண்மையில் இது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று  அவர் மேலும் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!