மீரிகம – வில்வத்த விபத்து: சமிக்ஞை கட்டமைப்பில் மாத்திரம் 5 லட்சம் ரூபா மதிப்பிலான நட்டம்

#SriLanka #Accident #Lanka4 #Train
Kanimoli
2 years ago
மீரிகம – வில்வத்த விபத்து: சமிக்ஞை கட்டமைப்பில் மாத்திரம் 5 லட்சம் ரூபா மதிப்பிலான நட்டம்

மீரிகம – வில்வத்த பகுதியில் உரத்தை கொண்டு சென்ற பாரவூர்தி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அங்குள்ள சமிக்ஞை கட்டமைப்பில் மாத்திரம் 5 லட்சம் ரூபா மதிப்பிலான நட்டம் ஏற்பட்டுள்ளது.

 எனினும் ரயிலின் இயந்திரத்தில் ஏற்பட்ட நட்டஈடு தொடர்பான மதிப்பாய்வு இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என ரயில் திணைக்கள பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார்.

 மீரிகம – வில்வத்த பகுதியில் உரத்தை கொண்டு சென்ற பாரவூர்தி ஒன்று பொல்கஹாவெலயில் இருந்து ரத்மலானை நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

 இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக ரயில் திணைக்களத்தினரால் நால்வர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!