இருவர் எலிக்காய்ச்சலால் கடந்த 9ஆம் திகதி பலி
#SriLanka
#Lanka4
#Fever
Kanimoli
2 years ago
குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சலால் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்திருந்தனர். 38 மற்றும் 39 வயதுடைய குறித்த நபர்களே அப்பகுதியிலுள்ள கிரிந்திவெல்மட குளத்தில் நீராடும்போது சுகவீனமடைந்துள்ளனர்.
மகுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் 12 பேர் காய்ச்சலினால் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குறைந்த நீருடன் ஏரிகளுக்கு மீன்பிடிப்பதற்கும் குளிப்பதற்கும் மக்கள் வருவதால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அப்பகுதி சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.