ஒன்பது ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்

#SriLanka #Ali Sabri #Lanka4 #Iran
Kanimoli
2 years ago
ஒன்பது ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில் ஒன்பது ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு நேற்று (10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானில் இருந்து வந்த இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டு கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

எதிர்வரும் நாட்களில் இவர்கள் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹுஸைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கடந்த வாரம் தெஹ்ரானில் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!