வெள்ளவத்தையில் 08 ஆவது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (10.08) இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த நபர் 8 ஆவது மாடி கட்டிடத்தில் இருந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறுதவறி விழுந்துள்ளார். இதனையடுத்து களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்ட அவர், சிகிச்சைப் பலினின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.