ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட 20 மாணவர்கள் பிணையில் விடுதலை
#SriLanka
#Arrest
#Police
#Court Order
#Lanka4
#students
Kanimoli
2 years ago
கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட 20 மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தலா 25000 ரூபா பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது