13 குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு!

#SriLanka #TNA #Defense # Ministry of Defense
Mayoorikka
2 years ago
13 குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு!

தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம், பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இங்கிலாந்து, இந்தியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட அதிகாரப் பகிர்வு சிறப்பான முறையில் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இதே முறைமையை இலங்கையிலும் அமுல்படுத்துவதற்கான இயலுமை காணப்படுவதாக கூறியுள்ளனர்.

 இங்கிலாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் சமூக கலாசாரங்கள் முற்றிலும் வேறுபட்டவை என்பதை அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 வட மாகாணத்தில் போதைப்பொருள், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்திற்கு பதிலளித்த அமைச்சர், இது தொடர்பான தகவல்களை விசேட பொலிஸ் குழுவிற்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!