போலி விசா மூலம் பிரான்ஸ் செல்ல முயன்றவர் கைது!
உகண்டா பெண்ணொருவரிடமிருந்து 35 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு போலியான பிரான்ஸ் வீசா மூலம் டுபாய் ஊடாக பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்துள்ளனர்.
இவர் மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஆவார். கொழும்பில் உள்ள கசினோ கிளப் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு உகாண்டா சென்று அங்குள்ள கசினோ கிளப் ஒன்றில் பணிபுரிந்துள்ளார்.
அங்கு சந்தித்த நடுத்தர வயது உகாண்டா பெண் ஒருவர், அவருக்கு பிரான்ஸ் செல்வதற்கு விசா தயார் செய்ய முன்வந்தார்.
இதன்படி, மாத்தறை பிரதேசத்தில் பெற்றோருக்குச் சொந்தமான காணி, அவரது தாயாருக்குச் சொந்தமான நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் விற்பனை செய்யப்பட்டு இந்த விசாவை தயாரிப்பதற்கு தேவையான 3000 அமெரிக்க டொலர்கள் அல்லது 35 இலட்சம் ரூபா இந்த உகண்டா பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.