பாரிய தீ விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட 99 பேருந்துகள்
இலங்கை போக்குவரத்து சபை தம்புள்ளை டிப்போவை நோக்கி நேற்று இரவு பெரும் தீ பரவியதால்இ தொழிற்துறை பிரிவுகள் மற்றும் 99 பழைய பேருந்துகளில் இருந்து பேருந்துகள் மற்றும் டிப்போவின் களஞ்சியசாலை காப்பாற்றப்பட்டது.
தம்புள்ளை பொலிஸார் மற்றும் தம்புள்ளை மாநகர தீயணைப்பு பிரிவினரின் பெரும்முயற்சி காரணமாக பேருந்துகள் காப்பாற்றப்பட்டன.
இ போ ச களஞ்சியசாலைக்கு பின்புறம் உள்ள வீடொன்றில் இருந்த குப்பைக் குவியலில் இருந்து தீ பரவி சுவரால் சூழப்பட்ட டிப்போவின் தோட்டம் முழுவதும் பரவியது.
தம்புள்ளை டிப்போ முகாமையாளர் மற்றும் பணியாளர்கள் களஞ்சியசாலை வளாகத்தை நோக்கி தீ பரவியதைக் கண்டு தம்புள்ளை பொலிஸாரிடமும் மாநகர சபையிடமும் உதவி கோரினர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்துஇ தம்புள்ளை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கியதுடன், ஒரு மணித்தியாலய கடுமையான போராட்டத்தின் பின்னர் தீ அணைக்கப்பட்டது.
கைத்தொழில் துறைக்கு பின்புறம் உள்ள காய்ந்த சருகுகள் எரிந்ததால் தீ வேகமாக பரவியதுடன், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தவும், டிப்போவின் சொத்துகளுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்கவும் அனைத்தையும் செய்தனர்.