கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: அகழ்வுப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகளுக்கான பாதீடு எதிர்வரும் 17ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்பின்னர், குறித்த பாதீடு ஆராயப்பட்டு, முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரப்பிப்பதற்கான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டது.
நேற்று முன்தினம் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கமைய, நேற்று குறித்த பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.பிரதீபன் தலைமையிலான குழுவொன்று அங்கு கள விஜயத்தை மேற்கொண்டது.
இதன்போது, தொல்பொருள் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது, மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் தொடர்பில், எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க உத்தேச தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.