ராணுவ தலைமை ஜெனரலை நீக்கிய வடகொரிய ஜனாதிபதி

#NorthKorea #President #Military
Prasu
2 years ago
ராணுவ தலைமை ஜெனரலை நீக்கிய வடகொரிய ஜனாதிபதி

கொரிய தீபகற்பத்தில் எப்போதுமே அசாதாரண சூழ்நிலைதான் நிலவி வருகிறது என்றால் அது மிகையாகாது. அதற்கு முக்கிய காரணம் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்துவதுதான். வடகொரியாவிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தென்கொரியா அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. 

இது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னிற்கு பிடிக்கவில்லை. இதனால் தென்கொரியாவை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வடகொரியா ஆயுதங்கள் சப்ளை செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. 

கடந்த மாதம் அமெரிக்காவின் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் தென்கொரிய கடற்பகுதியில் காணப்பட்டது. இதற்கு வடகொரிய ஆட்சேபனை தெரிவித்தது. வருகிற 21 மற்றும் 24-ந்தேதிகளுக்கிடையில் அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதை வடகொரியாவுக்கான அச்சுறுத்தல் என கிம் ஜாங் உன் பார்க்கிறார்.

இந்த நிலையில் வடகொரியாவின் ராணுவ தலைமை ஜெனரலை நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக ரி யோங் கில் என்பவரை ராணுவ தலைமை ஜெனரலாக நியமித்துள்ளார். இவர் பாதுகாப்பு மந்திரியாகவும் இருந்து வருகிறார். 

அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா? எனத் தெரியவில்லை. அதனோடு போருக்கு தயாராகும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு ஏற்ப ஆயுத தயாரிப்பை அதரிக்கவும் வலியுறுத்தியுள்ளார். 

கடந்த வாரம் ஆயுத தொழிற்சாலைக்கு சென்றிருந்தார். அப்போது ஏவுகணை என்ஜின், பீரங்கி மற்றும் ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய கேட்டுக்கொண்டார்.

 அங்குள்ள மீடியா ஒன்று, கிம் ஜாங் உன் தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை வரைபடத்தில் சுட்டிக்காட்டியது போன்ற படத்தை வெளியிட்டுள்ளது. இதனால் கிம் ஜாங் உன் போர் தொடுப்பதற்கு, ராணுவத்தை தயார் படுத்துகிறார் என பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!