இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் வைத்தியசாலையில் அனுமதி

#Accident #Hospital #Bus #Rescue
Prasu
2 years ago
இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கையர்கள் குழுவை ஒன்றை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பல இகங்கையர்கள் காயமடைந்துள்ளார்கள்.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பேருந்தில் பயணித்தவர்கள் அந்நாட்டில் விமான நிலைய கட்டுமான பிரிவில் பணிபுரிந்து வந்த 35 பேர் கொண்ட குழு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி முடிந்து திரும்பும் போது அவர்கள் பயணித்த பேருந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர், சிறு காயங்களுடன் 08 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். எனினும், ஆபத்தான நிலையில் மூன்று பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!