அரகலய போராட்டத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் பட்டியலிடப்பட்டன!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
அரகலய போராட்டத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் பட்டியலிடப்பட்டன!

கடந்த ஆண்டு அரகலய போராட்டத்தினால் காலி முகத்திடல், கொழும்பு நகரத்தின் பொதுச் சொத்துக்களுக்கு, 5.9 மில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டதாக பாராளுமன்றில் இன்று (10.09) தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தை மன்றில் தெரிவித்துள்ளார். 

இதன்படி,  பூங்கா மேசைகள் மற்றும் நாற்காலிகள் சேதமாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  பெஞ்சுகளுக்கு 1.48 மில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 91,000 ரூபாய் பெறுமதியான ஜன்னல் மற்றும் கண்ணாடிகள் அழிக்கப்பட்டதாகவும்,  16ஆயிரம் ரூபாய் பெறுமதியான  மின்சார கதவுகள் சேதமடைந்துள்ளதாகவும், புற்களுக்கு 56 ஆயிரம் ரூபாய் சேதம் ஏற்பட்டதாகவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!