மிருக வதை சட்டத்தில் மூவர் கைது
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
Kanimoli
2 years ago
மிருக வதை சட்டத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தந்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் பகுதியில் 20 கால்நடைகளை பார ஊர்தி ஒன்றில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரிய கால் நடை வைத்தியரின் அனுமதி பத்திரம் இன்மை, கால்நடைகளுக்கான உணவு மற்றும் சுகாதாரவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை, உரிய பகுதி கால்நடை வைத்தியரின் அனுமதியினை பெற்றிருக்காமை போன்ற குற்றச்சாட்டில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது 20 கால் நடைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், வாகனம் மற்றும் சாரதி அடங்கலாக மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் 10.08.2023 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.