புலம்பெயர்ந்தோரும் வாக்களிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்று தயாரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இணைய தொழிநுட்பத்தின் ஊடாக இந்த திட்டத்தை கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ளது.
நாடாளுன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவானது அண்மையில் கூடி கலந்துரையாடிய போதே இந்த திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அனைத்து பிரதிநிதிகளையும் உள்ளடக்கும் வகையில் குறித்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் வாக்களிப்பில் பங்கேற்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு விசேடமான விசா வகையொன்றை உருவாக்குவதற்கான அவசியம் குறித்து சர்வதேசதொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.