அமெரிக்காவில் பரவி வரும் Eris - EG5 கொவிட் 19 தொற்று
#Covid Variant
#America
#Disease
Prasu
2 years ago

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட 'Eris - EG5' கொவிட் 19 தொற்று வகையானது தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளது.
புதிதாக கண்டறியப்பட்ட கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 17 வீதமானோர் 'Eris - EG5' நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார துறைகள் தெரிவிக்கின்றன. 'Eris - EG.5' என்பது கொவிட் 19 ஒமிக்ரான் வைரஸின் துணை வகையாகும்.
உலக சுகாதார அமைப்பும் 'Eris - EG5' துணை வகையை கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.
கடந்த வாரம், 'Eris - EG5' குறித்து பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்நாட்டில் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது.



