சபோரிஜியாவை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷ்யா : இருவர் பலி!
#world_news
#War
#Lanka4
#Russia Ukraine
Dhushanthini K
2 years ago

உக்ரேனிய நகரமான சபோரிஜியா மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளில் மீட்புபணியாளர்கள் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை துணை மருத்துவர்களால் அவசரகால உதவிகள் வழங்கப்பட்டதாக உக்ரைனின் உள்துறை அமைச்சரான இஹோர் க்ளைமென்கோ தெரிவித்துள்ளார்.
இதேவெளை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட காணொளியில், தேவாலயத்திற்கு அருகில் எரியும் மற்றும் மோசமாக சேதமடைந்த கட்டிடங்களில் இருந்து புகை வெளியேறுவதைக் காணக்கூடியதாக உள்ளது.



