தேயிலைக்கு உரிமக் கட்டணம் அறவீடு!

#SriLanka #Lanka4 #Tea
Thamilini
2 years ago
தேயிலைக்கு உரிமக் கட்டணம் அறவீடு!

ஏற்றுமதி செய்யப்படும்  ஒரு கிலோகிராம் தேயிலைக்கு மூன்று ரூபாவை உரிமக் கட்டணமாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

தேயிலை ஆணையாளர் சுங்க ஏற்றுமதி பிரகடனத்தை அங்கீகரிக்கும் நேரத்தில் இந்த உரிமக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை தேயிலை சபை சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு தேயிலை ஏற்றுமதியாளரும் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனவும், ஏற்றுமதி உத்தரவை நிறைவேற்ற முடியாத பட்சத்தில், ஏற்றுமதியாளர் ஒருவருக்கு இந்த உரிமக் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும்  இலங்கை தேயிலை சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

தேயிலை ஏற்றுமதியில் வசூலிக்கப்படும் இந்த உரிமக் கட்டணம் தேயிலை வாரியச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மூலதன நிதியில் வரவு வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!