பேராதனை பல்கலைக்கழகத்தில் நிதி முறைக்கேடுகள் : கோப் குழு விடுத்துள்ள அறிவித்தல்!

#SriLanka #Parliament #Lanka4
Thamilini
2 years ago
பேராதனை பல்கலைக்கழகத்தில் நிதி முறைக்கேடுகள் : கோப் குழு விடுத்துள்ள அறிவித்தல்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல நிர்வாக பலவீனங்கள் மற்றும் முறைகேடுகள் கோப் குழுவிற்று தெரியவந்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதனடிப்படையில், இது தொடர்பான ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்வதற்கு அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்கு, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.டி.லகவம்ச ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.  

அத்துடன், அரசாங்கத்தின் நிதி விதிமுறைகளை பல்கலைக்கழக நிர்வாக சபை மீற முடியாது எனவும் கோப் குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

இதன்படி, ஒப்பந்தத்தை மீறிய 63 ஆசிரியர்களிடம் இருந்து 25 மில்லியன் ரூபாவை உடனடியாக மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, உயிரிழந்த பேராசிரியை ஒருவரின் கணவருக்கு 07 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை சட்டவிரோதமாக செலுத்தியமை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு உத்தரவிட்டுள்ளதுடன், 3.2 மில்லியன் ரூபாவை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு பரிந்துரை செய்துள்ளது.  

இதேவேளை, 7.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கலையரங்கம் 06 வருடங்களுக்கு மேலாக செயலிழந்து கிடப்பதுடன், 8.3 மில்லியன் ரூபா செலவில் கணனி அமைப்பின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை உட்பட பல விடயங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 06 வருடங்கள் கடந்தும் நிறைவு செய்யப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!